நடிகர் அஜித் தாஜ்மஹாலில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகர் அஜித் இப்போது வலிமை படத்தில் நடித்துள்ளார். இதன் ஷூட்டிங், ஷுட்டிங் சமீபத் தில் நிறைவடைந்தது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தில் இந்தி நடிகை ஹூமா குரேஸி நாயகியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடிக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ரஷ்யாவில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட ஷுட்டிங்கை முடித்த பிறகு, படக்குழு திரும்பிய பின், அங்கு 5000 கி.மீ. பைக் டிரிப் சென்றுவிட்டு திரும்பியிருக்கிறார் அஜித். இந்நிலையில் நடிகர் அஜித், டெல்லியில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அங்கு சென்றார்.

இடையில் கிடைத்த ஓய்வு நேரத்தில் அவர் தாஜ்மகாலை சுற்றிப் பார்க்க சென்றதாகவும் அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண் டனர். இந்தப் புகைப்படங்கள், சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே