சென்னையில் CAA வுக்கு எதிராக தீர்மானம் இயற்ற வலியுறுத்தி தடையை மீறி ஊர்வலம் நடத்தியதாக இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கலைவாணர் அரங்கு அருகே காலை 10 மணியளவில் தொடங்கிய பேரணி விருந்தினர் மாளிகை அமைந்துள்ள வாலாஜா சாலை வரை சென்றது.

பின்னர் அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்க ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் தடையை மீறி பேரணியில் ஈடுபட்டதாக ஆயிரத்து 500 பெண்கள், 39 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள் உட்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது குற்றவியல் சட்ட திருத்தச் சட்டம் உட்பட இரு பிரிவுகளில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே