ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து பலருக்கும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்திய அமலாபால் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய கதையில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சமீபத்தில் வெளியான ஆடை படத்தில் பாராட்டுகளையும், எதிர்பார்ப்புகளையும் ஒரு சேரப் பெற்றவர் அமலாபால்.
அந்த படத்தில், அரை நிர்வாணமாக இருப்பது போல் நடித்து இருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் ஆபாசம் ஏதும் இல்லாமல் காட்டப்பட்டிருந்தது. இருந்தாலும், இந்த படத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்து இருந்தன.
இதனிடையே தற்போது மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் அமலா பால். பெண்களுக்கு காமத்தின் மீது ஏற்படும் உணர்ச்சியை சொல்லும் லஸ்ட் ஸ்டோரீஸ் என்னும் வெப்சீரிஸ் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் சர்ச்சையில் சிக்கியது.
நெட்ஃபிளிக்ஸ் ஹிந்தியில் வெளியிட்டிருந்த இருந்த இந்த வெப்சீரிஸ்-இல் ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.
ஆனால் கலாச்சாரத்தை சீரழிக்கும் விதமாக இதன் கதையம்சம் இருந்ததாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையெல்லாம் எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட வெப்சீரிஸ் எனும் பெருமையையும் லஸ்ட் ஸ்டோரீஸ் பெற்றது.
இந்த நிலையில், இதனைத் தெலுங்கில் திரைப்படமாக எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் அமலா பால் நடிக்கவுள்ளார். 4 கதைகளை கொண்ட இந்த படத்தை, 4 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கவுள்ளார்.
இதில் ஒரு கதையைத்தான் சமீபத்தில் வெளியான ஓ பேபி திரைப்படத்தை இயக்கிய நந்தினி ரெட்டி இயக்க உள்ளார். இவரது இயக்கத்தில் அமலாபால், ஜெகதீஷ் பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
லஸ்ட் ஸ்டோரீஸ் வெப் சீரியலில் பெற்றோர் கண்முன்னே நாயகி ஒருவர் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சிகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடித்ததற்காக பல தரப்பில் இருந்தும் கியாரா அத்வானிக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது.
ஹிந்தியில் கியாரா அத்வானி நடித்த இந்த கதாபாத்திரத்தில் தான் தற்போது அமலா பால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆடை படத்தில் நிர்வாணமாக நடித்து, பலருக்கும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்திய அமலாபால் தற்போது பெண்களுக்கான பாலியல் தேவைகள் அதில் பல முரண்பாடுகள் தொடர்பான வில்லங்கமான கதையில் நடிக்க உள்ளார்.
இது, அவருக்கு பாராட்டுக்களைப் பெற்றுத் தருமா?? அல்லது ஹிந்தியை போன்ற கடும் விமர்சனங்களை ஏற்படுத்துமா என்பது படம் வெளியான பின்பே தெரியவரும்.