இந்தியா-வங்கதேசம் இடையே இந்தூரில் இன்று முதலாவது டெஸ்ட்

இந்தியா – வங்கதேசம் மோதும் முதல் டெஸ்ட் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று தொடங்குகிறது.

கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணியின் விராட் கோலி, புஜாரா, ரஹானே, மயங்க் அகர்வால், ரோகித் சர்மா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல பார்மில் உள்ளனர்.

பந்து வீச்சில் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி உள்ளிட்டோர் தங்கள் திறமையைக் காட்டி வருகின்றனர்.

வங்கதேச அணியில் தமிம் இக்பால், ஷகிப் அல்-ஹசன் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

டி20 முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றது வங்கதேச அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருந்தாலும், டெஸ்ட் போட்டியில் அவர்கள் தாக்குப்பிடிப்பார்களா?? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இரு அணிகள் இடையே நடைபெற்ற 6 டெஸ்ட் தொடர்களில் 5 முறை இந்தியா கைப்பற்றிய நிலையில், ஒரு முறை டிரா ஆகியுள்ளது.

இரு அணிகளும் 9 டெஸ்டில் மோதியதில் 7-ல் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் 2 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.

டெஸ்ட் தரவரிசையில் முன்னிலை வகிக்கும் இந்தியா, இந்த தொடரை முழுமையாகக் கைப்பற்றி நம்பர் 1 அந்தஸ்தை மேலும் வலுவாக்கிக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே