ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் மற்றும் வயாகாம் 18 ஸ்டுடியோஸ் சார்பில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ,அதிதி ராவ் ஹைதரி நடிக்கும் திரைப்படம் துக்ளக் தர்பார்.
முழு நீள அரசியல் நய்யாண்டியாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
துக்ளக் தர்பாரில் இயக்குநர் , நடிகர் பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பார்த்திபன், விஜய் சேதுபதி கூட்டணியில் ஏற்கனவே நானும் ரவுடிதான் திரைப்படம் வெற்றிக் கூட்டணியாக அமைந்தது.
துக்ளக் தர்பார் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருந்த சூழலில் கரோனாவின் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று வெளியிட்டு இருக்கிறார்கள்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகத் தொடங்கியிருக்கிறது.
விஜய் சேதுபதி தன்னுடைய வித்தியாசமான கதை தேர்வு கோணங்களில் இருந்து சற்று விலகி முழுநேர அரசியல் நய்யாண்டிகள் கலந்த துக்ளக் தர்பாரில் கதையின் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
துக்ளக் தர்பாரில் மஞ்சிமா மோகன் ,கருணாகரன் , பக்ஸ் பெருமாள் , ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 96 திரைப்பட புகழ் கோவிந் வசந்தா இசையமைக்கிறார்.
ஃபர்ஸ்ட் லுக் மட்டும் வெளியாகி இருக்க கூடிய சூழ்நிலையில் விரைவில் படப்பிடிப்புகளுக்கான அனுமதி அளிக்கப்பட்ட பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.