மறைந்தும் சாதனை படைத்துள்ள நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்!

பாலிவுட் இயக்குநர் முகேஷ் சக்ரா இயக்கத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் உருவாகி உள்ள தில் பேச்சாரா படத்தின் டிரெய்லர் ஜூலை 6 ஆம் தேதி வெளியாகியது.

இந்த டிரெய்லர் சமூக ஊடகங்களில் வைரலாகி இணையத்தையே அதிரவைத்துள்ளது.

24 மணி நேரத்தில் தில் பேச்சரா படத்தின் டிரெய்லர் யூடியூபில் 4.8 மில்லியன் லைக்குஸ்களுடன் 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்திருக்கிறது.

இதன் மூலம் இந்த டிரெய்லர் உலகளவில் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

இதுவரை டிரெய்லரை 41 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 7.5 மில்லியன் லைக்குகளையும் கடந்துள்ளது.

ஹாலிவுட் படங்களான அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார் படைத்திருந்த சாதனையை தில் பேச்சாரா முறியடித்திருக்கிறது. 

உலகளவில் அதிகம் விரும்பப்பட்ட ட்ரெய்லராக மாறியுள்ளது.

இதுகுறித்து இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டிவிட்டர் பக்கத்தில், “இது சுஷாந்த் மற்றும் தில்பேச்சரா மீதான அன்பைக் காட்டுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.

தில் பேச்சாரா படத்தில் ஆல்பத்தில் இருந்து விரைவில் பாடல்கள் வெளியாக இருக்கிறது.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2804 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே