ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரைலர் இன்று வெளியானது.

மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், விக்ரம் பிரபு, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கின்றனர்.

இதில் ஆதித்த கரிகாலனாக விக்ரம், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவி, சுந்தர சோழனாக பிரகாஷ்ராஜ், வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ஐஸ்வர்யா லட்சுமி பூங்குழலியாகவும், ஷோபிதா வானதியாகவும், சரத்குமார் பெரிய பழுவேட்டரையராகவும் மற்றும் பார்த்திபன் சின்னப் பழுவேட்டரையராகவும் நடித்திருக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை லைகா புரொடெக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஜெயரம் ரவி, கார்த்தி, த்ரிஷா, நாசர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே