புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் கொரோனா பாதிப்பு – மாவட்டவாரியாக நிலவரம்

இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்த புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல்முறையாக ஒரு நபருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு 1,477 ஆக இருந்த நிலையில் தற்போது 1,520 ஆக அதிகரித்துள்ளது.

இன்று அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோன்று திருச்சி, தென்காசியில் தலா 4 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

மாவட்ட வாரியாக பாதித்தோரின் எண்ணிக்கை:

வ.எண்மாவட்டம்19.04.2020 வரை தொற்று உறுதி செய்யப்பட்டோர்20.04.2020 மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டோர்மொத்தம் உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை
1.சென்னை28518303
2.கோவை133133
3.திருப்பூர்1081109
4.ஈரோடு7070
5.திண்டுக்கல்74276
6.திருநெல்வேலி6262
7.செங்கல்பட்டு5353
8.நாமக்கல்5050
9.திருச்சி46450
10.திருவள்ளூர்46248
11.மதுரை4646
12.தேனி4343
13.கரூர்4242
14.நாகப்பட்டினம்43144
15.ராணிப்பேட்டை3939
16.தஞ்சாவூர்4646
17.தூத்துக்குடி26127
18.விழுப்புரம்33336
19.சேலம்2424
20.வேலூர்2222
21.திருவாரூர்26127
22.கடலூர்2626
23.தென்காசி22426
24.திருப்பத்தூர்1717
25.விருதுநகர்1919
26.கன்னியாகுமரி1616
27.திருவண்ணாமலை1212
28.சிவகங்கை11112
29.ராமநாதபுரம்10111
30.நீலகிரி99
31.காஞ்சிபுரம்99
32.பெரம்பலூர்415
33.கள்ளக்குறிச்சி33
34.அரியலூர்224
35.புதுக்கோட்டை11
மொத்தம்1,477431,520

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே