டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி டெல்லியில் நடந்த டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறையில் ஒரு விவசாயி உயிரிழந்தார்.

விவசாயி போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் தான் உயிரிழந்ததாக சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் தெரிவித்தனர்.

இதனால் சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் ஆகியோர் மீது டெல்லி, நொய்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவர்கள் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறை தொடர்பாக டுவிட்டரில் அவதூறு பதிவிட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி சசிதரூர் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில், டெல்லி டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறை குறித்து தவறான கருத்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.

சசிதரூர், ராஜ்தீப் சர்தேசாய் உள்ளிட்டோர் நபர்களை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே