மெரீனா கடற்கரையில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்

பொங்கல் விடுமுறையையொட்டி சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரையில் குவிந்த 25 மெட்ரிக் டன் குப்பைகள் துப்புரவு பணியாளர்கள் மூலம் அகற்றப்பட்டது.

காணும் பொங்கலையொட்டி சென்னை மெரீனா கடற்கரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

இதனால் மெரினா கடற்கரை பகுதியில் 120 மாநகராட்சி பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபட்டனர். அடையாறு மண்டலத்தை பொருத்த வரை சுமார் 40 துப்புரவு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இயந்திரங்கள் உதவியோடு மேற்கொள்ளப்பட்ட துப்புரவுப் பணியில் 15.8 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டன.

இதேபோல் பெசண்ட் நகர் கடற்கரை அமைந்துள்ள அடையாறு மண்டலத்தில் 10 மெட்ரிக் டன் குப்பைகளை துப்புரவு பணியாளர் அகற்றினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே