சீருடையுடன் வலம் வந்த போலி பெண் சப் இன்ஸ்பெக்டர் கணவருடன் கைது

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சீருடையுடன் வலம் வந்த போலி பெண் சப்-இன்ஸ்பெக்டர் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

சிதம்பரம் காமாட்சி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த இராஜதுரையின் மனைவி சூரிய பிரியா.

தன்னை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என கூறிக்கொண்டு காவல் நிலையங்களில் சிபாரிசுகளை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிதம்பரம் கிராம நிர்வாக அதிகாரி அசன் கவான் என்பவர் பெண் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக் கொண்டு பெண் ஒருவர் சான்றிதழ் கேட்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சிதம்பரத்தில் போலீஸ் சீருடையில் உலா சென்ற சூரிய பிரியாவை சிதம்பரம் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரது கணவர் இராஜதுரை மற்றும் சக்கரபாணி ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் தம்மை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எனக் கூறிக்கொண்டு பல்வேறு மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே