புதிய வேலைவாய்ப்புத் திட்டத்தை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

மத்திய அரசின் வலிமையான நடவடிக்கை காரணமாக, 2021ல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது : கொரோனா சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இந்திய பொருளாதாரம் மீண்டு வருவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

பங்குச்சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. மத்திய அரசின் வலிமையான நடவடிக்கைகள் காரணமாக. இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது.

கடந்த ஏப்., முதல் ஆக., வரை அன்னிய நேரடி முதலீடு 13 சதவீதம் அதிகரித்துள்ளது. 3வது காலாண்டில், இந்திய பொருளாதாரம் நேர்மறையான வளர்ச்சிக்கு திரும்பும் .

அக்., மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் தொகை சுமார் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. ரயில்வேயில் கையளாப்படும் சரக்கின் அளவு அதிகரித்துள்ளது.

ஆலை உற்பத்தி, ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பு ஆகியவை பொருளாதாரம் மீட்சி பாதையில் பயணிப்பதை காட்டுகிறது.

வலிமையான பொருளாதார சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால், 2021ல் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பாதைக்கு திரும்பும்.

ஒரு தேசம், ஒரே ரேசன் கார்டு திட்டம் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதில், 68.6 கோடி பேர் பயன்பெற்றுள்ளனர்.பிரதமரின் சவ்நிதி திட்டத்தின் கீழ் 26.62 லட்சம் விண்ணப்பங்கள் கடன் கேட்டு வந்துள்ளன.

இந்த திட்டம் 30 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. புலம் பெயர் தொழிலாளர்களுக்கான தனி இணைணயதளம் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

1.5 கோடி விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.61 லட்சம் சிறுகுறு நடுத்தர தொழிலளர்களுக்கு 2.05 லட்சம் கோடி கடன், நபார்டு மூலம் 25 ஆயிரம்கோடி விநியோகம், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் 7,227 கோடி வழங்கப்பட்டுள்ளது. 11 மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனக 3,621 கோடி வழங்கப்பட்டுள்ளது.

வருமான வரி ரீபண்டாக 1.32 லட்சம் கோடி ரூபாய் 39.7 லட்சம் பேருக்கு திருப்பி கொடுக்கப்பட்டுள்ளது. மாநில மின் நிறுவனங்களுக்கு ரூ.1.18 லட்சம் கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் ரோஜார் புரோட்ஷகான் யோஜனா திட்டம் 31.03.2019 வரை அமல்படுத்தப்பட்டது. இது அனைத்து துறைகளிலும் அமல்படுத்தப்பட்டது.

3 ஆண்டுகள் வரை அமலில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த திட்டத்தில் சேர்பவர்களுக்கு மத்திய அரசின் சலுகைகள் கிடைக்கும்.

இதில் சேர்ந்த 1,52,899 நிறுவனங்களில் பணிபுரியும் 1,21,69,960 பேருக்கு ரூ.8300 கோடி அளவு சலுகைகளை பயன்பெற்றுள்ளனர். சிறு குறுதொழில்களுக்கான அவசர கால கடன் வசதி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுகிறது.

கொரோனாவில் இருந்து மீளும் கட்டத்தில் புதிய வேலைவாய்ப்பை உருவாக்க ”ஆத்மநிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா” திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இபிஎப்ஓ அமைப்பில் பதிவு செய்த நிறுவனத்தில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தவர்களும், கொரோனா காலகட்டமான மார்ச் 1 முதல் செப்.,30 வரை ரூ. 15 ஆயிரம் வரை சம்பளம் வாங்கி வேலை இழந்தவர்களும், அக்.,1க்கு பிறகு வேலையில் சேர்ந்தவர்களும் இந்த திட்டத்தில் சேரலாம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே