தீபாவளியை முன்னிட்டு 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள்..!!

தீபாவளியை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செங்கோட்டை, கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, வழக்கமான பயணிகள் ரயில்கள் இயக்கப்படாத நிலையில், ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் 20-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் இயக்கப்பட்டு வருகின்றனர்.

பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பிறகே ரயில்நிலையங்களில் அனுமதிக்கப்பட்டனர். சிறப்பு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படாததால், பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

கடந்த ஆண்டைவிட சுமார் 40 சதவீதம் கூட்டம் குறைவு என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய ஆண்டுகளில், தீபாவளி பயணத்துக்கு, புக்கிங் துவங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்து விடும். நடப்பாண்டு கொரோனா ஊரடங்கால், நிலைமை தலைகீழாகியுள்ளது.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்த ஐந்து லட்சத்துக்கும் அதிகமானோர் கோவை, திருப்பூர் மாவட்டங்களில், பல்வேறு நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இதனால் தென்மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பயணிகள் பயன்பெறும் வகையில் 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

செங்கோட்டை, கொல்லம், நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, காரைக்குடி உள்ளிட்ட 11 சிறப்பு ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே