நாவல்கள் படமாக்கப்படுவது வரவேற்க வேண்டிய விஷயம் : எழுத்தாளர் பூமணி

நாவல்கள் படமாக்கப்படுவது வரவேற்க வேண்டிய விஷயம் என தனது வெக்கை நாவலை தழுவி எடுக்கப்பட்ட அசுரன் திரைப்படம் குறித்து எழுத்தாளர் பூமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த நாவலாசிரியர் பூமணி பல்வேறு நாவல்களை எழுதி பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவருடைய வெக்கை நாவலைத் தழுவி தான், தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள அசுரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசுரன் படம் குறித்து பேசிய பூமணி, தற்போது சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் கதை பஞ்சம் உள்ளதாகவும், நல்ல நாவலை திரைப்படமாக பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே