புதிய தோற்றத்தில் ரசிகரின் மொபைலை வாங்கி செல்ஃபி எடுத்த நடிகர் அஜித்

புதிய தோற்றத்துடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

நேர்கொண்டபார்வை திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜீத் மீண்டும் இயக்குனர் வினோத்துடன் இணைந்துள்ளார்.

சமீபகாலமாக சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த நடிகர் அஜித் புதிய படத்துக்காக தோற்றத்தை மாற்றியுள்ளார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் அஜித் குமாருடன் ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் ரசிகர் ஒருவரது செல்போனில் அஜித் செல்ஃபி எடுக்கும் வீடியோவை அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே