“தஞ்சையில் ரெண்டு பொண்டாட்டி இல்லாத வீடே இருக்காது” : நடிகை வனிதா மீது பாஜக புகார்!

கடந்த சில நாட்களாக வனிதா விஜயகுமாரின் 3வது திருமணம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

பீட்டர் பாலின் மனைவி அவருக்கு எதிராக புகார் அளித்துள்ள நிலையில் இந்த விவகாரத்தில் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்,கஸ்தூரி, நாஞ்சில் விஜயன், தயாரிப்பாளர் ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி என்ற பெண் ஆகியோர் தலையீடு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இவர்கள் மீது போலீசில் வனிதா புகார் அளித்துள்ள நிலையில் தேவி கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வனிதாவுக்கு எதிராக பாஜகவின் கலை இலக்கியம் மற்றும் இந்து அறநிலையத்துறையின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜா மற்றும் காங்கிரஸ் பிரமுகர் சிவா ஆகியோர் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

நடிகை வனிதா கடந்த சில நாட்களுக்கு முன்பு தஞ்சாவூர் மாவட்டம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தஞ்சையில் ரெண்டு பொண்டாட்டி இல்லாத வீடே இருக்காது. வீட்டுக்கு வீடு இது சகஜம். பெண்களே இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பது போன்று பேசியிருந்தார்.

வனிதாவின் இந்த பேச்சுக்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தஞ்சை மாவட்டத்தின் பாரம்பரியம் இழிவுபடுத்தும் விதமாக பெண்களை கொச்சைப்படுத்தும் விதமாக பேசி இருப்பதாக அவருக்கு எதிராக பாஜகவினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இதன் அடிப்படையில் பாஜக மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் தஞ்சையை குறித்து இழிவாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் வனிதாவுக்கு எதிராக போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே