36 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கியது.
யாழ்ப்பாணத்தில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலாலி விமான நிலையம் சுமார் 20 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்ட சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை, திருச்சி, கொச்சின் ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கு விமான சேவையை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவையை இன்று காலை 5.55 மணிக்கு தொடங்கியது.
இதன் மூலம், யாழ்ப்பாணம் சென்னை இடையே 36 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விமான சேவை தொடங்கப்பட இருப்பது கவனிக்கத்தக்கது.