வணிக நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டிய பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்…

சீர்காழி அருகே வணிக நிறுவனங்களில் பணம் கேட்டு மிரட்டியதாக வந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் அவரது கணவரை டிஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம் சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஸ்ரீபிரியா.

இவரது கணவர் சோமசுந்தரம் திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரி காவல் நிலை தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

தற்போது இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா திருவெண்காடு பகுதி கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

இந்நிலையில் மருத்துவ விடுப்பில் வந்த சோமசுந்தரம் காரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியாவுடன் சென்று திருவெண்காடு அடுத்த மங்கைமடம் பகுதியில் உள்ள வணிக நிறுவணங்ளில் பணம் கேட்டு மிரட்டியதாக புகார் எழுந்தது. 

இது தொடர்பாக வணிக நிறுவணங்களின் உரிமையாளர்கள் சீர்காழி டிஎஸ்பி அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் துறை ரீதியிலான விசாரனை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் நேற்று தஞ்சை மண்டல டி.ஐ.ஜி., லோகநாதன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா மற்றும் அவரது கணவர் சேமசுந்தரம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கொரோனா பணியின்போது வசூல் வேட்டையில் ஈடுபட்ட ஆய்வாளர் குறித்த செய்தி காவலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே