சென்னை ஐஐடியில் மாணவிகளை ஆபாசமாக படம் பிடித்ததாக இணை பேராசிரியர் கைது

சென்னை ஐஐடியில் மாணவி ஒருவர் கழிவறையைப் பயன்படுத்தும் போது அதனை வீடியோவில் பதிவு செய்த ஐஐடி இணை பேராசிரியர் கையும் களவுமாகப் பிடிபட்டார்.

பெண்கள் கழிவறையில் இருந்த ஒரு துளையில் செல்போனை வைத்து, அதன் மூலம் வீடியோ எடுத்த விண்வெளி பொறியியல் துறையின் ஐஐடி சென்னை திட்ட அலுவலர் சுபம் பானர்ஜிதான் பிடிபட்ட நபராவார்.

சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள பெண்கள் கழிவறைக்குச் சென்ற பிஎச்டி மாணவி ஒருவர், அங்கிருந்த துளை வழியாக, பின்புறத்தில் யாரோ நிற்பது போன்று தெரிந்ததால், சுவரைச் சுற்றிக் கொண்டு அங்குச் சென்றார்.

அப்போது அங்கு கையில் செல்போனுடன் சுபம் பானர்ஜி நின்றிருப்பதைப் பார்த்தார். 

சுபம் பானர்ஜியை கையும் களவுமாகப் பிடித்த மாணவி, காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தார்.

இது குறித்து விசாரித்து வருவதாகவும், சுபம் பானர்ஜியின் செல்போன் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்படுவதாகவும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே