ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை விற்க மத்திய அரசு முடிவு

பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா மற்றும் பாரத் பெட்ரோலிய நிறுவனங்களை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகிய இரண்டு நிறுவனங்களின் விற்பனை செய்து ஒரு லட்சம் கோடி ரூபாய் நிதி திரட்ட முடிவு செய்துள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நஷ்டத்தில் இயங்கி வரும் இந்த இரண்டு நிறுவனங்களையும் வரும் மார்ச் மாதத்திற்குள் விற்பனை செய்துவிட முடியும் என கருதுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நிறுவனங்களையும் வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறுகிறார்.

பொருளாதார நெருக்கடிக்கு முடிவு கட்டும் வகையில் அரசு சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாக தெரிவித்துள்ள நிர்மலா சீதாராமன் பல துறைகள் தற்போது நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே