ஃபாத்திமா வழக்கு : சிபிஐ விசாரணை தொடக்கம்

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்டது குறித்த வழக்கு விசாரணையை சிபிஐ தொடங்கியது.

மாணவி பாத்திமா லத்தீப் கடந்த நவம்பர் எட்டாம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கை கோட்டூர்புரம் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் 150 பேரிடம் விசாரணை நடத்தினர்.

வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்பட்டது.

மேலும் பாத்திமாவின் செல்போன்கள் உண்மைதான் என தடயவியல் துறை உறுதி செய்துள்ளது.

இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது.

வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

குற்றவியல் நடைமுறை சட்டத்தின் படி இயற்கைக்கு மாறான மரணம் என்ற சட்டத்தின் கீழ் சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப்-இடம் சிபிஐ அதிகாரிகள் போனில் பேசியதையடுத்து அவர் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு நாளை வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே