பிரபாகரனின் 65வது பிறந்த நாளை கொண்டாடிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்…!

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65வது பிறந்த நாளை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்னையில் கேக் வெட்டிக் கொண்டாடினர். 

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 65வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் நள்ளிரவில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

அப்பகுதியைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் பிரபாகரனின் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் கோபி நாயனார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழர்களுக்கான நிலம் வருங்காலத்தில் அமைந்தே தீரும் என்றார்.  

பிரபாகரன் பிறந்த நாள் நிகழ்ச்சியில் சிலம்பம், புலி ஆட்டம் மற்றும் வான வேடிக்கைகள் நடத்தபட்டன. அப்பகுதியில் போலீசாரும்  குவிக்கப்பட்டதால் நள்ளிரவில் பரபரப்பு நிலவியது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே