நித்யானந்தா தனக்கு பாலியல் அழைப்பு விடுத்ததாக முன்னாள் சீடரின் குற்றச்சாட்டிற்கு நித்யானந்தா தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
நித்யானந்தா வெளியிட்டுள்ள வீடியோவில் நகைச்சுவையான ஆங்கிலத்தில் நோ சூடு, நோ சொரணை என்பதற்கு விளக்கமளித்தார்.
மேலும் தனது சத்சங்கத்தின் போது சினிமா ஹீரோக்கள் போன்று பஞ்ச் வசனங்கள் பேசுவது ஏன் என்றும் விளக்கமளித்துள்ளார்.
பொறுத்தது போதும் பொங்கி எழு என்ற வசனத்தை கூறிய நித்யானந்தா தனது சீடர்களை ஞானப் போரில் கலந்து கொள்ளுமாறும் வீர உரையாற்றி உள்ளார்.
உலகில் எங்கோ இருந்தபடி நித்யானந்தா தினசரி உபதேசங்களை வாரி வழங்கிக் கொண்டிருக்க, கர்நாடக உயர்நீதிமன்றம் அவருக்கு எதிரான பிடியை இறுக்கியிருக்கிறது.
வரும் 18 ஆம் தேதிக்குள் நித்யானந்தா எங்கிருக்கிறார் என்பதை கண்டுபிடித்து சொல்லவேண்டும் என்று அம்மாநில போலீசாரை கர்நாடகா உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.