பட்ஜெட்டில் தமிழகம் வஞ்சிக்கப்படாது : மா.ஃபா பாண்டியராஜன்

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் உரிய நிதி ஒதுக்குவார்கள் என தாம் நம்புவதாக அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் தனியார் தொண்டு நிறுவனத்தின் 2ம் ஆண்டு விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மா.ஃபா பாண்டியராஜன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், பட்ஜெட் கூட்டத் தொடரில் தமிழகத்துக்கு புதியதாக அறிவிக்கப்பட்டுள்ள 9 மருத்துவக் கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு, சென்னை கன்னியாகுமரி இருவழி ரயில் பாதைக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்காமல் உரிய நிதி வழங்குவார்கள் என தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே