சட்டப்பூர்வ கருகலைப்புக்கான கால வரம்பு நீட்டிப்பு! – பிரகாஷ் ஜவடேகர்

கருக்கலைப்புக்கான உச்சபட்ச காலவரம்பை 20-24 வாரங்களாக நீட்டிக்க, பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பெண்களுக்கு அவர்களது உடல் மீதான உரிமைகளைப் பாதுகாக்கும் முக்கிய சீர்திருத்தமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக மருத்துவர்கள் மற்றும் பெண்கள் அமைப்புகளிடம் இருந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டதாகவும் கூறினார்.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்கள், மாற்றுத்திறனாளி பெண்கள், சிறுமிகள் உள்ளிட்டோருக்கு இது உதவியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

24 வார கருவை கலைக்க அனுமதிக்கும் சட்ட திருத்த மசோதா வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே