ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகள், அவற்றுடன் இணைக்கப்பட்ட பார்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் பார்கள், நட்சத்திர ஓட்டல்களில்செயல்படும் பார்கள் ஆகியவை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதை ஒட்டி, மதுபான கடைகளை மூட உத்தர விடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன்படி முதற்கட்ட தேர்தல் நடைபெறும் இடங்களில் அடுத்த இரு நாட்களுக்கு அதாவது

  • இன்று மாலை 5 மணி முதல் வாக்குப்பதிவு முடிவடையும் 27-ஆம் தேதி மாலை 5 மணி வரை மதுக்கடைகள் மூடப்படும்.
  • 2-வது வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வருகிற 28-ந் தேதி மாலை 5 மணி முதல் 30-ந் தேதி மாலை 5 மணி வரையும்,

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜனவரி 2-ந்தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி மது விற்பனை செய்வோர், ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடம் கொண்டு செல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே