இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834லிருந்து 1,965ஆக உயர்ந்துள்ளது. மேலும், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 1,834 லிருந்து 1,965 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல் இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 லிருந்து 50 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை இந்தியாவில் 144-லிருந்து 151 ஆனது.
அதிகபட்சமாக மகாராஷ்டிரா- 335, கேரளா- 265, தமிழகம்- 234, கர்நாடகா- 110, ராஜஸ்தானில்- 108 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை மத்திய சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.