கரூரில் பரபரப்பு..!! திமுக- அதிமுகவினர் மோதல்..!!

கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினருக்கும், முன்னாள் அமைச்சரும் திமுக வேட்பாளருமான செந்தில் பாலாஜி தரப்பினருக்கும் ஏற்பட்ட மோதலில் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் மாறி மாறி குற்றஞ்சாட்டி கொள்கின்றன.

அதிமுகவை திமுகவும், திமுகவை அதிமுகவும் மாறி மாறி விமர்சித்து கொள்கின்றன.

மீண்டும் ஆட்சியை பிடிக்க அதிமுக தீவிரம் காட்டி வருகிறது.

திமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில் இந்த முறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என களப்பணியாற்றி வருகிறது.

கரூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரும், திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும் களம் காண்கின்றனர். 

இந்நிலையில் கரூரில் அமைச்சர் விஜயபாஸ்கர் வாக்கு சேகரித்த போது இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இரவு 10 மணிக்கு மேல் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மக்களிடம் வாக்கு சேகரித்து சென்றதாக திமுக புகார் அளித்தது. திமுகவினரும், அதிமுகவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதில் இரு தரப்பிலும் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே