திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..!!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு 25 சட்டசபைத் தொகுதிகளையும் கன்னியாகுமரி எம்பி தொகுதியையும் பெற்றது.

இந்த நிலையில் இன்றைய தினம் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்பது குறித்து அண்ணா அறிவாலயத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சிக்கு திமுக ஒதுக்கிய தொகுதிகள் ஏற்பகப்பட்டு இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 

இந்த நிலையில் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில் நாங்கள் நினைத்தபடி பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்து முடிந்தது. நாங்கள் கேட்ட தொகுதிகள் கிடைத்தன.

இந்த பேச்சுவார்த்தையில் எங்களுக்கு முழு திருப்தி உள்ளது என கூறி அவர் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலை வெளியிட்டார்.

அவை பின்வருமாறு:

  • பொன்னேரி
  • வேளச்சேரி
  • தென்காசி
  • ஸ்ரீபெரும்புதூர்
  • சோளிங்கர்
  • வேலூர்
  • காரைக்குடி
  • விளவங்கோடு
  • ஓமலூர்
  • சேலம்
  • ஊத்தங்கரை
  • குளச்சல்
  • ஈரோடு கிழக்கு
  • அறந்தாங்கி
  • விருத்தாசலம்
  • உடுமலைப்பேட்டை
  • கள்ளக்குறிச்சி
  • திருவாடாணை
  • மயிலாடுதுறை
  • கோவை தெற்கு
  • கிள்ளியூர்
  • நாங்குநேரி
  • ஸ்ரீவில்லிபுத்தூர்
  • ஸ்ரீவைகுண்டம்
  • உதகை

ஆகிய 25 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இதில் அறந்தாங்கி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கக் கூடாது என திமுக தொண்டர்கள் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அதையும் மீறி அந்த தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே