மகேந்திர சிங் தோனியின் அரிய சாதனையை முறியடித்த ஆப்கன் கேப்டன்!

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் யின் கேப்டன் அஸ்கர் அஃப்கன் தனது அணியை 42 போட்டிகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார்.

அதிக டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்ற கேப்டனாக தோனி படைத்த அரிய சாதனையை ஆப்கானிஸ்தான் கேப்டன் அஸ்கர் அஃப்கன் முறியடித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, உலகின் தலைசிறந்த கேப்டன்களுள் ஒருவர் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. கேப்டனாக பல தொடர் வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்றுத்தந்தவர். ஓய்வு பெறுவதற்கு முன், டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு அதிக வெற்றிகளை பெற்றுத்தந்து நிகரில்லா சாதனையை அவர் படைத்துவிட்டு தான் சென்றார். ‘கேப்டன் கூல்’ இந்தியாவை 72 போட்டிகளில் வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத்தந்துள்ளார். இது அவரை சக்ஸஸ்புல் கேப்டனாக நிலை நிறுத்தியது. ஆனால் அதிகப் பிரபலம் இல்லாத ஒருவர் தோனியின் இந்த மகத்தான சாதனை முறியடித்துள்ளார் என்பது இந்திய ரசிகர்களுக்கு சற்று வருத்தமாகத் தான் இருக்கும்.

ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் யின் கேப்டன் அஸ்கர் அஃப்கன் தனது அணியை 42 போட்டிகளில் வெற்றி பெற வைத்திருக்கிறார். இதன் மூலம் தோனியின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.

தோனி மொத்தம் 72 போட்டிகளில் அணியை வழிநடத்தி 41 வெற்றிகளை பெற்றுத்தந்தார். ஆனால் அஸ்கர் அஃப்கன் 52வது போட்டியிலேயே இந்த சாதனையை முறியடித்திருக்கிறார். தோனியின் வெற்றி சதவிகிதம் 60 ஆக உள்ளது. அதே நேரத்தில் அஸ்கர் அஃப்கனின் வெற்றி சதவிகிதம் 80க்கும் மேல் உள்ளது.

துபாயின் Sheikh Zayed மைதானத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. நேற்று நடந்த 3வது டி20 போட்டியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியிருந்தது ஆப்கானிஸ்தான்.

அதிக டி20 போட்டிகளில் அணியை வழிநடத்தி வெற்றி பெற்ற கேப்டன்கள் வரிசையில் தற்போது 42 வெற்றிகளுடன் அஸ்கர் அப்கன் (ஆப்கானிஸ்தான்) முதலிடத்திலும், 41 வெற்றிகளுடன் தோனி 2ம் இடத்திலும் உள்ளனர்.

3வது இடத்தில் இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் 33 வெற்றிகளுடன் உள்ளார். பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பராஸ் அகமது 29 வெற்றிகளுடன் 4ம் இடத்திலும், மேற்கு இந்திய தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சமி 27 வெற்றிகளுடன் 5ம் இடத்திலும் உள்ளனர்.

முன்னதாக ஜிம்பாப்வே அணியுடனான 2வது டி20 போட்டியின் போது டி20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் வரிசையில் ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான் நியூசிலாந்தின் டிம் சவுத்தியை முந்தி 3வது இடம் பிடித்துள்ளார். ரஷீத் இதுவரை 95 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

107 விக்கெட்களுடன் முதல் இடத்தில் இலங்கையின் லசித் மலிங்காவும், 98 விக்கெட்களுடன் பாகிஸ்தானின் ஷாகித் அஃப்ரிடி 2ம் இடத்திலும் உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே