உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மீண்டும் நீதிமன்றத்தை நாடி திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக உள்ளாட்சித் தேர்தல் வெளியாகியுள்ள அந்த அறிவிப்பானையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் திமுக மற்றும் காங்கிரஸ் சார்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இட ஒதுக்கீடு முறையை முறையாக பின்பற்றாமல் இந்த தேர்தல் அறிவிப்பானை வெளியாகி உள்ளது எனவும், அதனால் இதனை ரத்து செய்து விட்டு புதிதாக ஒரு அறிவிப்பானையை வெளியிடுவதற்கு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு விட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திதான் இந்த மனுவினை திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் மீதான விசாரணையை நாளை அல்லது நாளை மறுநாள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் வழக்கறிஞர்கள், முன் வைத்தனர்.
இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை நாளை மறுநாள் எடுத்துக்கொள்வதாக தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.