நடப்பாண்டில் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் – TNPSC

எந்த தேர்வும் ரத்து செய்யப்படாது என்றும், திட்டமிட்டபடி அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 144 தடை அமல்படுத்தப்பட்டு, பல்வேறு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஓய்வு பெறுவோரின் வயதை அதிகரித்த காரணத்தால், தமிழக அரசுத் துறைகளில் காலியிடங்கள் ஏற்படாது.

இதனால், தலைமைச் செயலகம், அரசுத் துறைகளின் பல்வேறு முக்கிய அலுவலகங்களில் ஓராண்டுக்கு காலியிடங்களே உருவாகாது.

இதனால், அரசுப் பணியாளா் தோவாணையம் சாா்பில் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 மற்றும் கிராம நிா்வாக அலுவலா் தோவுகள் நடைபெற வாய்ப்பில்லை என்று இரண்டு நாட்களாக செய்திகள் வலம் வந்தன.

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின் படி குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால், நடப்பு ஆண்டில் தேர்வுகள் ரத்தாக வாய்ப்புள்ளது என்ற தகவல் தவறானது எனவும் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே