#BREAKING : இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000ஐ கடந்தது

இந்தியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 5,194-ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கையும் 149-ஆக உயா்ந்துள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவின் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,194 ஆக அதிகரித்துள்ளது.

பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் 508 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 

புதிதாக 773 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து பலியானோா் எண்ணிக்கையும் 149 -ஆக உயா்ந்துள்ளது. நோய்த்தொற்றில் இருந்து 402 பேர் குணமடைந்துள்ளனர்.

மாநிலங்களில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 1,018 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

அதிகபட்சமாக 48 போ உயிரிழந்துள்ளனா். தமிழகத்தில் 690 பேரும், தில்லியில் 576 பேரும், தெலங்கானாவில் 364 பேரும், கேரளத்தில் 327 பேருக்கு கரோனா பாதிப்பு உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே