கரூரில் டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பரிணாமம் பயிற்சி முகாம்

டார்வின் பிறந்த நாளை முன்னிட்டு கரூரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் பரிணாமம் பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் அறிவியல் பிரச்சார உபகுழு சார்பில் வருகின்ற பிப்ரவரி 12 டார்வின் பிறந்த தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான பரிணாமம் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கரூரை அடுத்த புன்னம்சத்திரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 2 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சி முகாமை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்ட குழு ஏற்பாடு செய்துள்ளது.

நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜான் பாஷா வரவேற்புரையாற்றினார். பள்ளியின் தாளாளர் பாண்டியன் துவக்க உரையாற்றினார்.

அறிவியல் பிரச்சாரக் குழுவின் மாநில ஒருங்கிணைப்பாளர் சேதுராமன் பயிற்சி பற்றிய அறிமுக உரையாற்றினார்.

மேலும், நிகழ்ச்சியில் “மனித பரிணாம வளர்ச்சியும் சமூகமும்” என்ற தலைப்பில் அகில இந்திய பொதுச் செயலாளர் பேராசிரியர் ராஜமாணிக்கம் பயிற்சி அளித்தார்.

பரிணாமம் குறித்த ஆவணப் படங்கள், குறும்படங்கள் திரையிடப்பட்டு அது பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது.

குறிப்பாக பரிணாமம் குறித்து உலக அளவில் தனி கவனம் பெற்ற டார்வின் எழுதிய “சார்லஸ் டார்வினின் மனித இனங்களின் தோற்றம்” (Charles Darwin’s On the ORIGIN of SPECIES) என்ற நூலைப் பற்றிய கலந்துரையாடலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் சாகுல் அமீது, அரசுப்பள்ளி ஆசிரியை திலகவதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நமது செய்தியாளர் : மு.மணிகண்டன்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே