ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல் – தற்போதைய நிலவரம்

ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் அரசியல் கட்சிகள் பெற்ற வெற்றி குறித்து தற்போதைய நிலவரம். 

4,139 இடங்களில் போட்டியிட்ட திமுக, 2,032 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

3,842 இடங்களில் போட்டியிட்ட அதிமுக, 1,707 இடங்களை மட்டும் பிடித்துள்ளது.

இதில் பாமக 432 வார்டுகளில் போட்டியிட்டு 204 இடங்களை பிடித்துள்ளது.

இதற்கு அடுத்தப்படியாக 421 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 111 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 

434 வார்டுகளில் போட்டியிட்ட தேமுதிக, 94 இடங்களை பிடித்துள்ளது.

அமமுக 4 ஆயிரத்து 184 இடங்களில் போட்டியிட்ட நிலையில், 95 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

125 வார்டுகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் 61 இடங்களை பிடித்துள்ளது.

257 இடங்களில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 29 இடங்களை பிடித்துள்ளது. இதில் தமிழ்மாநில காங்கிரஸ் 7 இடங்களையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே