தமிழகத்தில் எதிர்க்கட்சியாக வர பாஜகவிற்கு ஆசை வந்திருக்கிறது… அமைச்சர் கடம்பூர் ராஜு..!!

தமிழகத்தில் 2-வது இடத்திற்கு வருவதற்குதான் திமுக-பாஜக இடையே போட்டி என்று வி‌‌.பி. துரைசாமி கூறியிருக்கலாம் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழகத்தில் பாஜகவிற்கு எதிர்க்கட்சியாக வர ஆசை வந்திருக்கிறது என விமர்சனம் தெரிவித்துள்ளார். 2011ல் அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக எதிர்கட்சியானது போல பாஜகவும் வர விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலில் பாஜகவின் தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் மத்தியில் ஆட்சியில் இருப்பதால் பாஜக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை சந்திக்கும் என வி.பி.துரைசாமி குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் தமிழகத்தில் அதிமுக-திமுக இடையே போட்டிதான் இதுவரை நிலவி வந்தது, இனிமேல் பாஜக-திமுக போட்டியாக இருக்கும் எனவும் கூறியிருந்தார். திமுகவிலிருந்து பாஜகவிற்கு ஏராளமானவர்கள் வர இருக்கிறார்கள் எனவும் பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி தெரிவித்திருந்தார்.

இதற்கு தற்போது கடம்பூர் ராஜு பதிலளித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், திமுகவில் மு.க.ஸ்டாலின் கனிமொழியை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை,‌ கனிமொழி மு.க.ஸ்டாலினை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இல்லை என கூறினார். கனிமொழிக்கு போட்டியாக உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப் படுத்தப்படுகிறார் என தெரிவித்தார்.

Related Tags :

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே