புதிய கல்விக் கொள்கையின் படி இனி M.Phil படிப்புகள் நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.
அப்பொழுது அவர் பேசுகையில், கடந்த 34 ஆண்டுகளாக கல்விக் கொள்கையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
உயர்கல்வி படிப்புகளில் படிப்புக் காலத்தில் ஓராண்டோ, ஈராண்டோ சில காலம் விடுப்பு எடுத்துக் கொண்டு மீண்டும் படிப்பைத் தொடரலாம்.
M.Phil படிப்புகள் நிறுத்தப்படுகிறது.
புதிய கல்விக் கொள்கையில் உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.