2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி – மத்திய உயர்கல்வித்துறை

கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள பொது ஊரடங்கு நாளை மறுநாள் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி 7, லோக் கல்யாண் மார்க் பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முக்கிய மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முக்கியமாக புதிய கல்வி கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பெயரை கல்வி அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவை முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர்கள் இன்று மாலை செய்தியாளர்களிடம் விளக்கம் அளிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதிய கல்வி கொள்கை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது…

அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், மனித வளத்துறை அமைச்சகம், கல்வித்துறை அமைச்சகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை 21ம் நூற்றாண்டிற்கான புதிய கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது முக்கியமானது, 34 ஆண்டுகளாக கல்வி கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது.

கல்வித்துறையில் முக்கியமான சீர்த்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, என கூறியுள்ளார்.

உயர்கல்வித்துறை செயலர் விளக்கம்

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலர்  அமித் கரே புதிய கல்வி கொள்கை தொடர்பாக விளக்கமளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், புதிய கல்விக்கொள்கையின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

முதல் ஆண்டில் பழைய மற்றும் புதிய கல்விக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும்.

2ம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக நடைமுறையில் இருக்கும்.

பொறியியல் போன்ற உயர்க்கல்வி படிப்புகளில் மாணவர்கள் ஓரிரு ஆண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு மீண்டும் படிப்பை தொடரலாம்.

புதிய கல்விக்கொள்ளையில், எம்.ஃபில் படிப்புகள் நிறுத்தப்படுகிறது.

15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி என்ற முறை நிறுத்தப்படும்.

உயர்க்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குப்படுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.

நாட்டின் மொத்த உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்வித்துறைக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

2030ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும்.

தேசிய ஆராயச்சி நிறுவனம்(NRF) அமைக்கப்பகிறது.

படிப்பறிவு விகிதம் குறைவாக உள்ள பகுதிகளில் சிறப்பு கல்வி மண்டலங்கள் அமைக்கப்படும்.

இந்திய மெழிகளுக்கான இலக்கியம், அறிவியல்பூர்வ வார்ததைகளை கண்டறிய கவனம் செலுத்தப்படும்.

தொன்மையான மொழிகளை அங்கீகரிக்கும் வகையில் தேசிய கல்வி நிறுவனங்கள் அமைக்கப்படும்.

இணைய வழி பாடங்கள் மாநில மொழிகளில் வெளியிடப்படும்.

மாநில மொழிகளுக்கு இணையாக புதிய கல்விக் கொள்கையில் பாடத்திட்டங்கள் இருக்கும்.

மாநில மொழிகளில் கல்வி கற்பிக்க இணையதளம் மூலம் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் அளிக்கப்படும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் மென்பொருள் உருவாக்கப்படும்.

5+3+3+4 என்ற முறையில் பள்ளி வகுப்புகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

12ம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அமலில் இருக்கும்.

5ஆம் வகுப்பு வரை தாய் மொழியில் கற்பிக்க வேண்டும்.

மதிப்பெண்கள் அடிப்படையில் இல்லாமல் ரிப்போர்ட் கார்டு திறன் அடிப்படையில் இருக்க வேண்டும்

குழந்தைகளுக்கு எளிதான வழிமுறைகள் மூலம் ஆரம்பக் கல்வி கற்பிக்கப்படும்.

ஆறாம் வகுப்பு முதல் தொழிற்முறைக் கல்விகளின் அடிப்படைகள்  மாணவர்களுக்கு கற்பிக்கப்படும், என கூறியுள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே