வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்!

சையது முஸ்தாக் அலி தொடரின் அரையிறுதி போட்டியில் ஹரியானா அணி வீரர் அபிமன்யு மிதுன் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

சையது முஸ்தாக் அலி தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஹரியானா – கர்நாடகா அணிகள் இன்று மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்ற கர்நாடகா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஹரியானா அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ரன்வேட்டையை தொடங்கியது.

கர்நாடகா அணி வீரர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறினர். இறுதியாக ஹரியானா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது.

இந்த போட்டியில் ஹரியானா அணி 19 ஓவர்கள் வரை 3 விக்கெட்கள் மட்டுமே இழந்து இருந்தது.

கடைசி ஓவரை அபாரமாக வீசிய அபிமன்யு மிதுன் 5 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார்.

முதல் 3 ஓவர்களில் அவர் எந்த விக்கெட்டையும் வீழ்த்தாமல் இருந்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் விக்கெட் எடுத்த அபிமன்யு தொடர்ந்து 4 விக்கெட்களையும், கடைசி பந்தில் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய சாதனையை அபிமன்யு படைத்துள்ளார்.

அதுமட்டுமின்றி ராஞ்சி கோப்பை, சையது முஸ்தாக் அலி, விஜய் ஹாசரே என மூன்று உள்ளூர் தொடர்களையும் ஹட்ரிக் எடுத்த வீரர் என்ற பெருமையும் மிதுன் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் கர்நாடாக ப்ரிமீயர் தொடரில் மேட்ச் பிங்சிங் புகாரில் இவர் சிக்கி உள்ளார்.

இந்த புகார் தொடர்பாக விசாரணைக்கு வருமாறு பெங்களூரு போலீசார் இவருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இந்த அரையிறுதி போட்டியில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கர்நாடகா அணி இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே