பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும்

நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய புள்ளியியல் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 2018-19 நிதியாண்டில் 6 புள்ளி 2 சதவீதமாக காணப்பட்ட தயாரிப்பு துறையின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 2 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறையும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வேளாண், கட்டுமானம், மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் போன்ற துறைகளின் வளர்ச்சியிலும் சரிவு காணப்பட்டுள்ளதாகவும்; அதேசமயம் சுரங்கம், பொது நிர்வாகம், பாதுகாப்பு உள்ளிட்ட சில துறைகளில் சிறிய வளர்ச்சி தென்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே