ஈரான், ஈராக் வான்பகுதியில் இந்திய விமானங்கள் செல்ல வேண்டாம் – மத்திய அரசு

இந்தியர்கள் தேவையின்றி ஈரான், ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாமென்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

அமெரிக்கா நடத்திய தாக்குதலில் ஈரான் நாட்டின் தளபதி தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார்.

இதற்கு பதிலடி தரும் விதமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதலை அமெரிக்கா ராணுவ தலைமையகமான பெண்டகனும் உறுதி செய்துள்ளது.

தங்கள் நாட்டு படைகளுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.

இந்த தாக்குதலை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியர்கள் தேவையின்றி ஈரான், ஈராக் நாட்டிற்கு செல்ல வேண்டாமென்றும் ஈரான், ஈராக், வளைகுடா வான்பகுதிகள் வழியாக இந்திய விமானங்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே