பிரதமர் நரேந்திரமோடிக்கு மீண்டும் உதவ வந்தது கச்சா எண்ணெய்

பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்த நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வரும் நிலையில் பிரதமர் மோடியின் உற்ற நண்பனாக கச்சா எண்ணை மீண்டும் ஒருமுறை மாறியுள்ளது.

மோடி பிரதமராக பதவியேற்றபோது ஒரு பேரல் கச்சா எண்ணை விலை 1754 ரூபாயாக இருந்தது. ஆனால் அவரது பதவிக்காலத்தில் மூன்றாவது ஆண்டில் 3 ஆயிரத்து 446 ரூபாயாக சரிந்தது. இந்நிலையில் தற்போது அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக ஒப்பந்த பிரச்சினையால் அமெரிக்காவிடமிருந்து சீனா கச்சா எண்ணை வாங்கும் அளவு பெரும்பாலும் குறைந்து விட்டது. இதன் பாதிப்பு சர்வதேச சந்தையில் எதிரொலித்துள்ளது. தேவை குறைந்ததன் காரணமாக அமெரிக்கா கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 3 ஆயிரத்து 846 ரூபாயாக 3 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெயின் விலை 4 ஆயிரத்து 218 ரூபாய் என்ற அளவுக்கு சரிந்துள்ளது. இது இரண்டு விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சியாகும்.

எண்ணெய் விலை சரிந்திருப்பது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று கூறப்படுகிறது. உழவு வேலைகளுக்கான உபகரணங்களுக்கான டீசல் விலை குறையும் பட்சத்தில் உற்பத்தி விலையில் அது தாக்கத்தை ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு பேரலுக்கு 717 ரூபாய் என்ற அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்தால் இறக்குமதி செலவு மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையில் 71,000 கோடி ரூபாய் வரை குறையும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மீண்டும் ஒரு முறை கச்சா எண்ணெய் விலை குறையும்போது ஒரு லிட்டர் பெட்ரோல் டீசல் மீது இரண்டு ரூபாய் வரி விதிக்கும் பட்சத்தில் இந்த நிதி ஆண்டில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே