துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து யு.எஸ்.ஜி.எஸ். எனப்படும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணத்தில் உள்ள ஏகியான் என்ற தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கிரீஸ் நாட்டின் வடகிழக்கே உள்ள நியோன்கார்லோவிஸ் என்ற நகரை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, இஸ்மிர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து தரைமட்டமானதாக முதல்கட்ட தகவல் தெரிவிக்கின்றன. 

மேலும் சில கட்டடங்கள் குலுங்கியதால், உயிர் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை.

இது ஒருபுறம் இருக்க மறுபுறம் நிலநடுக்கம் காரணமாக கடல்பகுதியில் சுனாமி ஏற்பட்டு ஏகன் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல்நீர் புகுந்தது.

தொடர்ந்து பல்கேரியா, வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகளிலும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே