அதிமுக தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைக்கும் பொதுக்கூட்டம் தொடங்கியது.
சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக இருவரும், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இக்கூட்டத்தில், அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் அதிமுக நிர்வாகிகள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடையில் அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் அமர்வதற்காக 94 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.