ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மோதுகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் மந்தீப் சிங் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து தொடக்க வீரர் ராகுலுடன் ஜோடி சேர்ந்த அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் பஞ்சாப் அணியின் ரன்விகிதம் கனிசமாக உயர்ந்தது.

ஆனால் மறுமுனையில் மெதுவாக விளையாடிய கேஎல் ராகுல் 41 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பூரன் அதிரடியாக ஆடி 10 பந்துகளில் 22 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் ஒரு புறம் தடுமாறிய நிலையில், மறுமுனையில் கிறிஸ் கெயில் அதிரடியில் இறங்கினார்.

இதன் மூலம் சத்ததை நெருங்கிய அவர் 99 ரன்களில் துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் வீசிய அந்த பந்து கெயிலில் காலில் பட்டு ஸ்டெம்பை தாக்கியது.

63 பந்துகளை சந்தித்த கெயில் 6 பவுண்டரி 8 சிச்சருடன் 99 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணி தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். தொடர்ந்து 186 ரன்கள் வெற்றி இலக்குடன் ராஜஸ்தான் ராயல்ஷ் அணி களமிறங்கவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே