மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
தொலைபேசி எண், ஆதார் அல்லது டேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
மேலும் இந்த நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. இ-பாஸ் நடைமுறை எளிதானதால் சென்னையின் நுழைவு வாயில் என்று சொல்லப்படும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் இன்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது.
சென்னையில் இருந்து ஏராளமனோர் சொந்த ஊர் செல்வதையும், ஏற்கனவே சொந்த ஊர் திரும்பியவர்கள் மீண்டும் சென்னைக்கு வருவதையும் காண முடிகிறது.

பொது போக்குவரத்து இல்லாததால் இரு சக்கர வாகனங்களில் ஏராளமானோர் பயணித்தனர். அதேபோல சென்னையின் எல்லைப் பகுதியான வண்டலூரில் வழக்கம் போல் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
Related Tags :
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள்.