ஆயுத பூஜையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பூஜைப்பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு இடங்களில் பூக்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.

நெல்லையில் மல்லிகை மற்றும் கனகாம்பரம் அதிகபட்சமாக கிலோ ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.

பூஜை பொருட்களின் விலையும் இருமடங்கு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில், கதம்பமாலை கட்டுவதற்கான பூக்களின் விலை உயர்ந்து, கிலோ 50 ரூபாய்க்கு விற்கபட்ட அரளி 400 ரூபாய்க்கும், செண்டுமல்லி 150 ரூபாய்க்கும், கோழிக்கொண்டை 120 ரூபாய்க்கும் விற்பனையானது.

திருவண்ணாமலை, ஆரணி, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, நாகை மாவட்டம் வேதாரண்யம், கரூர் உள்ளிட்ட இடங்களில் பூஜைப்பொருட்கள், பூக்கள், பழங்கள் விற்பனை விறுவிறுப்புடன் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே