இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்காக பசுமை பட்டாசுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறைந்த அளவு மாசை வெளியிடும் பசுமை பட்டாசுகளை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது பேசிய அவர், காற்றில் மாசு கலப்பதை கட்டுப்படுத்துவதற்காக பசுமை பட்டாசு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதாக கூறினார்.
சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், மக்கள் தீபாவளியை கொண்டாட, மாற்று பட்டாசு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர் ஹர்ஷவர்தன், பசுமை பட்டாசுகள் மூலம் காற்றில் மாசு ஏற்படுவது 30 சதவீதம் குறையும் எனவும் தெரிவித்தார்.
மாற்று வேதிப் பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் சந்தையில் குறைந்த விலைக்கே கிடைக்கும் என கூறப்படுகிறது.