மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கை வரும் 29-ம் தேதி நடத்த தடையில்லை..!!

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் குடமுழுக்கு திட்டமிட்டபடி வரும் 29ம் தேதி நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க மேற்பார்வை குழு அமைக்கவும், கொரோனா விதிகள் மீறப்பட்டால் அதிகப்படியாக அபராதம் விதிக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, கொரோனா விதிகள் பின்பற்றப்படும் என்றும் கோயில் ஊழியர்களை வைத்தே குடமுழுக்கு நடத்தப்படும் என அறநிலையத்துறை உறுதியளித்துள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே