கனமழை காரணமாக கன்னியாகுமரி, கோவையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை, கோவை, கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் கன்னியாகுமரி மற்றும் கோவை மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்றிரவு முதல் மழை பெய்து வந்தாலும் பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே